68. பரட்டை கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

பரட்டை கீரையானது கீரைகளின் ராணி என்று அழைக்கபடுகிறது. இந்த கீரை ஆங்கிலத்தில் ‘கேல்’ என்று அழைக்கபடுகிறது. இந்த கீரையின் தோற்றமானது தலைவிரி கோலம் போல இருப்பதால் இது பரட்டை கீரை என பெயர் பெற்றது

குறைந்த அளவு கலோரி, நிறைய நார்ச்சத்து, கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை. மேலும் எண்ணற்ற சத்துக்கள் இந்த பரட்டை கீரையில் அடங்கியுள்ளன. பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் C ஆனது இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது. இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை போன்றே இருக்கும்

  1. பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வர்களுக்கு இதய தசைகள் வலுப்பெறும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.
  2. உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி பரட்டைக் கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடை குறையும்.
  3. பரட்டைக் கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைபாடுகள் ஏற்படுவது குறையும்.
  4. பரட்டைக்கீரையை தொடர்ச்சியாக எடுத்து கொள்பவர்களுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு.
  5. பரட்டை கீரையானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

மற்ற கீரைகள்

லச்லக்கெட்டை கீரை
நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லச்ச கெட்ட கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரையை  அழகுக்காகவே பலரும் வீடுகளில்
பூந்தாழை ரம்பை
50. பூந்தாழை ரம்பை இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர் .இது ஒரு வாசனை ஊட்டி பிரியாணி,
48. வாதநாராயனன் கீரை
மனித உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்றுகூடினாலும் குறைந்தாலும் ஆரோக்கிய குறைபாடு சந்திக்க நேரிடும் வாத நாராயணன் என்பது

Share

Facebook
Pinterest
WhatsApp