இன்னைய கீரை ,சேப்பங்கிழங்கின் இலைகள் தான்.
இதன் கிழங்குகளும் இலைகளும் உண்பதற்கு ஏற்றவை. இவற்றில் கால்சியம் ஆக்ஸலேட் என்ற அரிக்கும் தன்மையுடைய வேதிப்பொருள் இருப்பதால், வேகவைத்தே உண்ண வேண்டும். இதன் வளர்ச்சி குட்டையாக இருந்தாலும், நிலத்தில் இதன் வேரில் கிழங்கு உண்டாகிறது. இக்கிழங்கு மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலைகளில் உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. இது அலங்காரச் செடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சேப்பங்கிழங்கும், கீரையும் சற்றுக் கசப்பாய் இருக்கும். இதைப் போக்கப் புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.
சேப்பங்கிழங்கின் இலைகள் முக்கோணவடிவில் பெரிய அளவில் இருக்கும்: பார்க்க மிகவும் அழகானவையாகவும் இருக்கும்.
சிறந்த உணவான சேப்பங்கீரையை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை உடனே குணமாகும்.
சேப்ப இலையின் சாறு வெட்டுக்காயங்களை உடனே ஆற்றும். வெட்டுக்காயத்தின்
மீது சில துளிகள் விட்டால் போதும்.
மூலநோய் குணமாகவும், மூளைவளர்ச்சி அதிகரிக்கவும் சேப்பங்கிழங்கு, சேப்பங்கீரை முதலியவற்றை உணவில் அடிக்கடி இடம் பெறச் செய்யுங்கள்