ஆரை கீரை

52.ஆரை கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால், நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த இதழில் ‘ஆரை’ எனும் மூலிகை குறித்துப் பார்ப்போம்.

நல்ல நீர்ப்பிடிப்புள்ள குளங்கள், வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் வயல்வெளிகளிலும் காணப்படும் ஒரு கொடி வகைத் தாவரம்தான் ஆரை. இதில், ‘ஆரை’, ‘புளியாரை’, ‘வல்லாரை’ என மூன்று வகைகள் உள்ளன.இதில் வல்லாரை பொதுவாக நாம் அறிந்தகீரை . இவை மூன்றுமே உண்ணத்தகுந்த சிறந்த கீரைகளாக இருப்பதுடன் மன அழுத்தத்தைக் குறைக்கும் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன.

முன்பு, கிராமங்களில் வயல் வேலையை முடித்துவிட்டு வருபவர்கள் ஆரை உள்ளிட்ட பல வகைக் கீரைகளைப் பறித்து உண்டு வந்தனர். அந்தக் கீரை வகைகளை ‘பண்ணைக் கீரை’ என்றும் சொல்வார்கள். சத்து நிறைந்த இந்தக் கீரைகள் உண்டதால், அவர்களுக்கு எவ்வித சத்து டானிக்குகளும் தேவைப் படவில்லை. ஆனால் நாகரிகமயமான இக்காலத்தில் கிராமங்களில் கூட இப்பழக்கம் மறைந்து விட்டதால்தான், சத்துக் குறைபாட்டுக்குள்ளாகி கை, கால் உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அலைகின்றனர்.

ஆரை இலைகளைப் பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதைக் கீரை போல சமைத்து உண்டு வர, அதிகப்படியான தாய்ப்பால் சுரப்பு பிரச்னை கட்டுப் படும். இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறப்பான பலனளிக்கக் கூடியது. தொடர்ந்து இதைச் சமைத்து உண்டுவந்தால், போதுமான சத்துகள் கிடைப்பதோடு நீரிழிவு நோயும் கட்டுப்படும். தவிர நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு முதலான சிறுநீர்த்தாரை தொற்று நோய்களும் குணமாகும்

மற்ற கீரைகள்

69.பாகல் இலை
காய்களில் கசப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது பாகற்காய் தான். உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான
90 -பூவரசு இலை
அரச இலை போலவே பூவரசு இலையும் மருத்துவ குணங்கள் கொண்டதுதான்.. அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
84.பீர்க்கன் இலை
பீர்க்கன் காயே நாம் உணவில் சேர்க்கிறோம் ..ஆனால் அதன் இலைகளும்,விதைகளும் வேர் என முழு தாவரமுமே மருத்துவ குணங்கள் கொண்டதுதான் … சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள்

Share

Facebook
Pinterest
WhatsApp