2. மணத்தக்காளி கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை வகைகளை இன்று குறைந்த அளவிலான மக்களே உண்ணும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரையை உண்பதால் ஏற்பட்டும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை பயன்கள்

தொண்டை கட்டு

பாடகர்கள், ஆசிரியர்கள், பேச்சையே தொழிலாக கொண்ட மேடை பேச்சாளர்கள் போன்றவர்கள் தொடர்ந்து பல மணி நேரம் நீர் கூட அருந்தாமல் தொண்டை வறண்டு போகும் அளவிற்கு பேசும் போதும், படும் போது தொண்டை பகுதியில் வறட்சி ஏற்பட்டு தொண்டை கட்டிக்கொள்வதோடு, வீக்கம் மற்றும் புண்களும் ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்

வயிற்று புண்கள்

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மணத்தக்காளி கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

அத்தியாவசிய சத்துகள்

உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. மணத்தக்காளி கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.

சிறுநீரகம்

குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. மணத்தக்காளி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

கருத்தரித்தல்

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.உடலுக்கு குளிர்ச்சி, வாய்ப்புண், அல்சர் பிரட்சனைகளுக்கு அருமருந்து….வாயில் வெள்ளை நிற சூட்டு புண் வந்தால் இதன் இலைகளை வாயில் வைத்து உமிர்நீரை சிறிது நேரம் தேக்கி வைத்தால் ஓரிரு நாளில் புண் சரியாகிவிடும்….இது போன்ற எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் கொண்டதுதான் இந்த மணத்தக்காளி கீரை…

2. மணத்தக்காளி கீரை
நாட்டு பொண்ணாங்கன்னி
நாட்டு பொண்ணாங்கன்னி பொன்னாங்கன்னியில் பயன்படுத்தும் கீரைகளாக மூன்று வகை உண்டு...ஆனால் இன்னும் பல ரகங்கள் இருப்பதாக தெரிகிறது..ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி
84.பீர்க்கன் இலை
பீர்க்கன் காயே நாம் உணவில் சேர்க்கிறோம் ..ஆனால் அதன் இலைகளும்,விதைகளும் வேர் என முழு தாவரமுமே மருத்துவ குணங்கள் கொண்டதுதான் ... சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள்
76. இலந்தை இலை
முந்தைய காலங்களில் சிறுவர்கள் உண்ணும் சுவையான தீண்பண்டங்களில முக்கியமானது இலந்தை பழம்..இதெல்லாம் 90 ஸ் கிட்ஸ்க்கு என்னவென்றே தெரியாத நிலைதான்...அதன் பழத்தில் எவ்வளவு சத்தோ ,அதேபோல அதன்

மற்ற கீரைகள்

81.பப்பாளி இலை
பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது எளிதாக உடையக் கூடியது.பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தான் தொகுப்பாக இருக்கும். அதனால் தான் நம் ஆரோக்கியத்தையும் உயரத்தில் வைக்க
80. நார்த்தை இலை
எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் நார்த்தங்காயை தவிர்க்கவேண்டும்.
79.பூசனி இலை
இதுவரை எல்லாரும் பூசணிக்காயைத் தான் உணவில் சேர்த்து வந்தோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா. பூசணிக்காய் இலைகள் கூட நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த

Share

Facebook
Pinterest
WhatsApp